வேடிக்கை மனிதர்கள்
அவரின் முகத்தில் வன்மம்.. குட்டை, தலை சொட்டை. மதம் காரணமா இருக்குமோ ? மை பூசி இருந்தார். சிரித்து பார்த்தில்லை. மற்றவறோ, தலை பின்னால் கொண்டை. டிக்கெட் வாங்கும் போது பிரம்சனை. பின்னர் கூட்டம்அதிகம் ஆனபின்பு, அந்த மைக்காரர், குடுமியாரை பார்த்து ஏச தொடங்கினார். பாதையின் நடுவில் நின்று இடையூராக உள்ளீர்கள் என்று. சண்டை போட்டார்கள். வார்த்தைகள் அதிகமாயிற்று. குடுமீக்காரரும் தன் குரலை உசத்த, அங்கு அமர்ந்தவர்களுக்கு கேளிக்கூதக இருந்தது. குடிமிகாரரின் மனைவி வினவினாள், திரும்பி அவளை பார்த்து முறைக்க, அவள் வாயடைத்து போனால். இருவருக்கும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, தான் முன்னோர்கள், இந்நாள் வரை கொண்டுவந்த நல்லது கேட்டது அனைத்தையும் காரணம் காட்டி ஏச தடங்கிறார். வெளிப்படையா இல்லாமல், ஆனால் இந்த பிரச்னை மூலமாக, மறைமூலமாக. ஒருவரோ, முன்காலத்தில், கடவுளின் பெயரில், தான் செய்தது தவறு என்று கூட தெரியாமல், அது தான் சரி என்று சொல்லிக்கொடுக்க, அவர்கள் மற்றவர்களின் அடையாளத்தை அகற்றம் போராட்டத்தில் எதிரிகளை சம்பாதிதலில், ஒரு தரப்பினரின் பிரதிபலிப்பாக வன்மம் காட்டி கொண்டு இருந்தார் குடுமிகார். இம்மண்ணும், மக்களும், தெய்வமும், கலாச்சாரத்தையும் அளிக்க நினைத்தவர்களின் எதிர் குரலாக அவர் திகழ்ந்தார். அவர்கள் இட்ட கூச்சலை பார்த்து ரசித்து கொண்டிருந்த மக்களின் முகத்தை நீங்கள் பார்த்து இருந்திருக்க வேண்டுமே நீங்கள்!